மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 2022/2023 ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கை ஆரம்பக் கூட்டம் புதன்கிழமை (12.10.2022) போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் செல்வி. ஆர். ராகுலநாயகி அவர்களின் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களின் தலைமையில் மாலை 2மணிக்கு ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் வெல்லவெளி கமநல சேவைகள் நிலையப் பகுதியில் 500 ஏக்கரும், மண்டூர் கமநல சேவைகள் நிலையப் பகுதியில் 560 ஏக்கரும், பழுகாமம் கமநல சேவைகள் நிலையப் பகுதியில் 2500 ஏக்கருமாக, மொத்தம் 4560 ஏக்கர் நவகிரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழும், தும்பங்கேணி நீர்ப்பாசனத்தில் 1982 ஏக்கரும் செய்கை பண்ணுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்போகச் செய்கைக்கான விதை நெல் இனங்களாக BG 94, AT 362, BG 357, AT 307, BG 300, 374, 373, 308, 360, 358 போன்ற நெல் இனங்களை விதைப்பது என இதன் போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விதைப்பற்கு 25.10.2022 தொடக்கம் 20.11.2022 வரை கால அவகாசம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கோவிந்தன் கருணாகரம், மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் பிரதிநிதிகள், இதன் போது கலந்து கொண்டனர்.
 
307760691 169981115692656 5698697843768569494 n
 
 
308756801 169981052359329 1120184301128790248 n
 
309897792 169981085692659 4327390150233070436 n
 
310274629 169981189025982 7287227666547840679 n

News & Events

07
අගෝ2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
අගෝ2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

Scroll To Top