போரதீவுப்பற்று கலாசார இலக்கிய விழா – 2022
மேற்படி நிகழ்வானது 27.12.2022 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் போரதீவுப்பற்று கலாசார பேரவைத் தலைவரான பிரதேச செயலாளர் செல்வி ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. க.கருணாகரன் அவர்கள், விசேட அதிதியாக புனர்வாழ்வு அமைச்சின் ஓய்வு பெற்ற மேலதிக செயலாளர் திரு. சி.பாஸ்கரன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி.துலாஞ்சனன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச.சசிகுமார், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. கந்தசாமி மோகனதாஸ், கணக்காளர் திரு. தி.அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் திரு. தி.உமாபதி, கலாசார உத்தியோகத்தர் திரு. ஆ.பிரபாகரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.ஆர்.ராகுலன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. ஆ.தனேந்திரராசா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அ.குககுமாரன் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச கலாசார விழா சிறப்பு மலரான “மருதம்” நூல் வெளியிடப்பட்டமை விசேட அம்சமாகும். பாடசலை, அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன. இலக்கிய விழாவில் வெற்றியீட்டிய மாணவ மாணவியருக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















