2023 ஆம் ஆண்டு – கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்.

 
பிறந்துள்ள புத்தாண்டு 2023ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி.ஆர். ராகுலநாயகி அம்மணி அவர்கள் தலைமையில் 2023.01.02 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமானது. சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி நினைவுகூரப்பட்டது. தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாண உறுதியுரை ஏற்றுக்கொண்டதுடன் பிரதேச செயலாளர் அவர்களால் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கான அரச ஊழியரின் பங்களிப்பு பற்றியும் அரசின் தற்போதைய "நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" தொனிப்பொருளின் கீழ் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கான செயற்றிட்டத்தை வகுத்துக்கொள்வதும் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் உரையாற்றப்பட்டது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 
                   323442824 1353012392210699 4605819746700540920 n      322500843 1850496301969180 3233510321774719825 n
 
322937379 1845904325784234 3851850884026548877 n
 
322200564 1123865904989912 5366077120470071901 n
 
322212073 5779450268809399 3697439721018489524 n
 
322868939 938663327506733 7480551011162631407 n
 
323900031 1246234122963088 8049194560635574263 n

News & Events

07
Aug2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
Aug2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

Scroll To Top