புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் நிகழ்வும் கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வும்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலிருந்து மாற்றலாகி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு. சோமசுந்தரம் ரங்கநாதன் அவர்கள் கடமையைப் பொறுப்பேற்கும் நிகழ்வு 2023.08.02ஆம் திகதி காலை 11.00 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி. துலாஞ்சனன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளரான திரு. சோமசுந்தரம் ரங்கநாதன் அவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு. பிரணவரூபன், போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சசிகுமார், கணக்காளர் திரு. தி. அம்பிகாபதி, நாவிதன்வெளி பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா, கணக்காளர் திரு. க. ரிஸ்வி யாஹ்சர், போரதீவுப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு. தி. உமாபதி உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும், கிளைத்தலைவர்களும், போரதீவுப்பற்று மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















