dspp

தூரநோக்கு

''வினைத்திறன் மிக்க அரச சேவையூடாக பிரதேசத்தின் அபிவிருத்தி''

 

பணிக்கூற்று

''அபிவிருத்தியடைந்த பிரதேசமாக, எமது பிரதேச செயலகப் பிரிவினை மாற்றுவதற்கான எல்லாவகையான செயற்பாடுகளையும் ஊக்குவித்து, மேம்படுத்துவதற்கான அரச சேவையினை பொதுமக்களுக்கு வழங்குதல்''

 

போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் எல்லைகள்

வடக்கு - பட்டிப்ளை பிரதேச செயலக பிரிவு

கிழக்கு -  மண்முனை தெற்கு  எருவில் பற்று பிரதேச செயலக பிரிவு

தென் -   நவிதன்வெளி பிரதேச செயலக பிரிவு (அம்பாறை)

மேற்கு - உஹன பிரதேச செயலக பிரிவு (அம்பாறை)

போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவு 43 கிராம பிரிவுகளை கொண்டுள்ளது.  180 Sq.Km. என்ற பரப்பளவில் அளவிற்கு உள்ளது . அதன் மக்கள் தொகை 46863 மற்றும் 12883 குடும்பங்கள் உள்ளன. 22816 ஆண்கள் மற்றும் 24047 பெண்  வாழ்கின்றனர். அதன் மக்கள் தொகை பெரும்பான்மையாக தமிழரகளையும் மற்றும் சிறுபான்மையாக சிங்களவர்களையும் கொண்டுள்ளது.  மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், குடிசை மற்றும் சுய வேலைவாய்ப்பு என்பன இங்கு காணப்படுகின்றது.

பெரும்பான்மையாக  மக்கள்  இந்துமதத்தினை பின்பற்றுவதுடன் குறைந்த அளவில் கிறித்துவம் மற்றும் பௌத்தம் என்பனவும் பின்பற்றபடுகிறது. இந்து மதம் சார்ந்த  கோயில்கள் அதிக எண்ணிக்கையில் இங்கே காணப்படுகின்றன. பிரபலமான கோவில்களில் மண்டூர் கந்தசாமி கோவில் மற்றும்  போரதீவு பத்திர அம்மன் கோவில் என்பன காணப்படுகின்றன.

போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவு மோசமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவாகும் . 1990 முதல் 2007 வரை காலத்தில் மக்கள் இங்கிருந்து பல தடவைகள்  இடம்பெயர்ந்து தற்காலிகமாக மாவட்டத்தின் பல்வேறு  இடங்களில் குடியேறி பின்னர் இங்கே மீள்குடியேறி உள்ளனர், இப்பிரதேசமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னும்  மக்களுக்கென்று நிறைவு செய்யப்படவில்லை. காட்டு யானைகளினால் தொடர்ந்து   இப்  பிரதேச மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர்.  

இரண்டு முக்கிய நீர்பாசன   குளங்களை இங்கே காணலாம். அவை   நவகிரி மற்றும் தும்பன்கேணி ஆகியவை ஆகும்.  மற்றும் மாகாண சபை உட்பட்ட 100 க்கும் மேற்பட்ட குட்டைகளும்  பத்து சிறிய குளங்களும் இங்கே காணப்படுகின்றன.  வரட்சி காலங்களின் போது ஏற்படுகின்ற  குடிநீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது . இந்த பகுதியில் நில வளங்கள்  உள்ளபோதிலும் காணப்படுகின்ற நீர் பற்றாகுறையால்  துரதிருஷ்டவசமாக குடிசை மக்கள் கூட வீட்டு தோட்டம் செய்ய  முடியாத நிலை  காணப்படுகின்றது.

கடந்த யுத்த சூழ்நிலை தொலைத்தொடர்பு வசதிகள் இன்னும் வளர்ச்சி அடையாத அசாதாரண நிலை காணப்படுகின்றது. அத்துடன் மின்சார வசதிகள் கூட இதுவரை  முழு வளர்ச்சி அடையாதநிலையில்தான் உள்ளது. ஆனால் மறுபுறம் 33 பாடசாலைகள் இந்த பிரிவு இல் நிறுவப்பட்டு அவை  கல்வி அலுவலகத்தினால் நிர்வகிக்கபட்டு வருகின்றது. 

விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்க எளிதாக போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவு வெல்லாவெளி,மண்டூர் மற்றும்  பழுகாமம் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு விவசாய பயிற்சியாளர்கள் மற்றும் விரிவாக்க அலுவலர்களினால் விவசாய சேவைகள் மையங்கள் உடாக பல்வேறு பட்ட சேவைகள் வழங்க படுவதனால் விவசாய நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் சீராக கொண்டு செல்லப்படுகின்றது.

பழுகாமம், மண்டூர் ,பொறுகாமம், தம்பலவத்தை, கோவில் போரதீவு, பெரிய போரதீவு  ஆகிய கிராமங்கள்  மட்டக்களப்பு வாவியின்  அருகில் உள்ளதால் இக்  மீன்பிடி முக்கிய தொழிலாக காணப்படுகிறது.. செங்கல், பானை தயாரித்தல், மற்றும் கயிற்று தொடர்புடைய உற்பத்திகள் அதிகளவில் குடிசைகளில் கைத்தொழில்கள் மேற்கொள்ளபடுகிறன. இங்கு  கணினிபயிற்சி , தச்சு வேலைபயிற்சி, என்பன  தொழில் பயிற்சி  அதிகார மற்றும் அரசு சாரா ஒரு சில நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்படுகின்றது என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாக ஒன்றாக உள்ளது. சில பகுதிதிகளை தவிர  நாளந்தம்  போக்குவரத்து இந்த  பிரிவில்  சீராக இயக்கப்படுகிறது சொல்ல முடியாது.

எனவே தற்போதய சாதாரண நிலைமைய்யில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள்   மக்களின் திறமை மிக்க வளர்ச்சி நடவடிக்கைகள்   காரணமாக .இப் பிரதேச செயலக பகுதியானது எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக வளர்ச்சி பாதையில் இருக்கும்.

வரைபடத்தில் பிரதேச செயலகத்திற்கு

Details Of Divisional Secretaries Performed Detail In Porativupattu Divisional Secretariat

Ser NoNameFromTo
1 Mr J.J.Vaas 1971 1972
2 Mr S.Sadadsarashanmugathas 1972 1973
3 Mr R.Rasalingam 1973 1974
4 Mr R.Markandu 1974 1975
5 Mr S Balasuntharam 1975 1976
6 Mr A Ampalavanan 1976 1978
7 Mr S S Jeganathan 1978 1980
8 Mr R Monagurusamy 1981 1983
9 Mr P R Kanagasabai 1983 1985
10 Janab M J M Rafeek 1986 1987
11 Mr G K Barnes 1987 1988
12 Mr R Nagalingam 1988 1989
13 Mr S Samithamby 1989 1990
14 Mr V M Pathmanathan 1990 1991
15 Mr S Balasubramaniyam 1991 1991
16 Mr S Amalanathan 1991 1991
17 Mr S Baskaran 1992.01.01 2000.10.01
18 Mr K Karunaharan 2000.10.01 2004.09.30
19 Mr K Kathirgamanathan 2005.10.01 2007.02.24
20 Mr U Uthayasrithar 2007.02.25 2012.03.21
21 Mr N Vilvarathnam 2012.03.21 2017.11.01
22 MS R Rahulanayahi 2017.11.01  

News & Events

07
ஆக2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
ஆக2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top