மட்டக்களப்பில் Empowering IS (EIS) வழிகாட்டல் கருத்தரங்கு வெல்லாவெளி களுவாஞ்சிகுடி பட்டிப்பளை பிரதேச செயலங்களை உள்ளடக்கிய கருத்தரங்கு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்
வெற்றிகரமாக நடைபெற்றது!

​இன்றைய தினம் (24.09.2026) மூன்று பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான Empowering IS (EIS) வழிகாட்டல் கருத்தரங்கு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

​நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:

​தலைமை முகாமைத்துவப்பணிப்பாளர்
அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமான இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்
சமுர்த்தி முகாமைமைத்துவப் பணிப்பாளர்கள். தலைமை முகாமையாளர்கள் வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
​நோக்கங்கள்: EIS அமைப்பின் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் 8 அடிப்படை நோக்கங்களை முன்வைத்து இக்கருத்தரங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

​தொழில்நுட்ப உதவி (Trouble Shooting): மூன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் EIS பயன்பாட்டில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வதற்காகப் பிரத்யேக WhatsApp குழு (WhatsApp Group) ஒன்று உருவாக்கப்பட்டது.

​டிஜிட்டல் மதிப்பீடு : பயிற்சியின் திறனை அளவிட 'சிலந்தி வலை அளவீட்டு முறைமை' (Spider Web Assessment) பயன்படுத்தப்பட்டது. பயிற்சிக்கு முன்னரான மற்றும் பின்னரான மதிப்பீடுகள் Google Form மூலம் டிஜிட்டல் முறையில் திரட்டப்பட்டு அறிக்கையிடப்பட்டது.

​இப்பயிற்சி முகாம் மூலம் சமுர்த்தி மற்றும் வங்கி உத்தியோகத்தர்களின் EIS தொழில்நுட்ப அறிவு மேம்படுத்தப்பட்டு, வலுவூட்டல் வேலைத்திட்டத்தினூடாக பயனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு இலகுவழி உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

PHOTO 2026 09 24 15 24 02  PHOTO 2026 09 24 15 23 59 1

..PHOTO 2026 09 24 15 24 03 1  PHOTO 2026 09 24 15 24 02 1

News & Events

24
செப்2026
பிரதமர் மட்டக்களப்பு பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு

பிரதமர் மட்டக்களப்பு பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு

பிரதமர் மட்டக்களப்பு பிரதேச செயலகங்களுக்கு பாராட்டுஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப்...

24
செப்2026
Empowering IS (EIS)

Empowering IS (EIS)

மட்டக்களப்பில் Empowering IS (EIS) வழிகாட்டல் கருத்தரங்கு வெல்லாவெளி...

குடியுரிமை சாசனம்

Scroll To Top